கேள்வி – 02

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd 

Vice Principal : Islamic University of Qatar

கேள்வி :

ஒரு முஸ்லிம் ஆத்மீகத்தில் பெற்றுக் கொள்ளும் எந்தவொரு முதிர்ச்சி நிலையின் போதாவது, இஸ்லாமிய அடிப்படைக் கடமைகள் ஏதாவதிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளனவா?

பதில் :

இல்லை! சித்த சுவாதீனமற்றவர்களுக்கும், சிறுவர்களுக்குமே இஸ்லாமியக் கடமைகளிலிருந்து விடுபட்டிருப்பதற்கு அனுமதியுண்டு! சிலவேளை, ஆத்மீகத்தில் மிகவும் லயித்துப் போகின்றதொரு நிலையிலும், சிலர் தமது சுய புத்தியை இழந்து விடுவதுண்டு. இதை அரபியில் ‘மஜ்தூப்’ என்பார்கள். இதுகூட, சித்த சுவாதீனமற்றதொரு நிலைதான்.

முகம்மது நபியவர்களை விடவும் ஆத்திமீகத்தில் உச்ச நிலையை அடைய எவருக்கும் இயலாது! வொலி மார்களும், சூபிகளும் ஆசை கொள்வது – முகம்மது நபியவர்களின் ஆத்மீக நிலையை அடைவதற்ககாக அல்ல. நபியவர்களின் வழியில் முயன்று ஓரளவாயினும் பூரணத்துவம் பெறுவதுதான் அவர்களின் விருப்பம்!

முகம்மது நபி (ஸல்) அவர்களே – தொழுகை உள்ளிட்ட எந்தவொரு வணக்க முறைகளிலிருந்தும் கடைசிவரை விடுபடவேயில்லை எனும் போது – சாதாரண மனிதர்கள் எவ்வாறு தம்மை விடுவித்துக் கொள்ள முடியும்?

ஒரு முஸ்லிம் – சுய சிந்தனையும், புத்தியும், அறிவும் உள்ளவராக இருக்கும் வரையில், இஸ்லாமியக் கடமையினை விடுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவருக்கு அனுமதியில்லை! குர்ஆனிலோ, ஹதீஸிலோ அவ்வாறான அனுமதிகள் எவையும் வழங்கப்படவுமில்லை!!

நன்றி
ஸுன்னத் வல் ஜமாஅத் online Dawah Service

Powered By Indic IME