ஷாதுலி (ரலி) இன் வஸீயத்துக்களில்

குதுபுல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி ரலியல்லாஹு  அன்ஹு அவர்களுடைய கடைசி வஸீயத்துக்களில் சில வரிகள்

ஏ மனிதா

 வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற நேரத்தையும், துஆக்கள் ஒப்புக் கொள்ளும் நேரத்தையும் அடைய விரும்பினால் பாங்கு சொல்லும் நேரத்தில் துஆக்களைக் கேட்டுக் கொள்.

Shazuli Rali - 1

 99 நோய்களில் இருந்து அல்லாஹ் உன்னை பாதுகாக்க விரும்பினால் தினமும் (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி அலிய்யுல் அலீம்) என்று ஓதி வரவும்.

Shazuli - 2

முஸீபத்துக்களில் இருந்து வெற்றி பெற வேண்டுமென நினைத்தால் தினமும் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) என்று ஓத வரவும்.

Shazuli - 3

ஞானங்களையும் இன்னும் ஹிக்மத்துக்களையும் அடைய நீ விரும்பினால் மேலதிகமாகவும் வீணாகவும் கதைப்பதை விட்டு விடு.

Shazuli - 4

இபாதத்தின் இன்பத்தை அடைய நாடுபவன் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கி தஹஜ்ஜத்தையும் தொழுது வரட்டும்.

Shazuli - 5

உன் உள்ளத்தில் குறைகளை விட்டும் நீங்க நாடினால் மனிதர்களுடைய குறைகளை ஆராய்ந்து திரிவதை விட்டு விடட்டும். காரணம் அப்படிச் செய்வதனால் உள்ளத்தில் நயவஞ்சகம் ஏட்பட்டு விடும்.

Shazuli - 6

உனது உள்ளம் மரணிக்காமல் இருக்க வேணடுமா? அப்படியாயின் (யா ஹய்யு யா கய்யும் லாஇலாக இல்லா அன்த) என்ரு 40 தடவை தினமும் ஓதி வரட்டும்.

Shazuli - 7

கேலி செய்வதையும் அதிகமாகச் சிரிப்பதையும் விட்டு விடு. இல்லையென்ரால் அல்லாஹ்வின் அச்சம் உன்னை விட்டு பறந்து விடும்.

Shazuli - 8

கியாம நினைவிலும், கஷ்ட நஷ்டங்களிலும், ரஸுலுல்லாகி ஸல்லல்லாஹு  அலைகி வஸல்லம் அவர்களைக்கான விரும்பினால் தினமும் (ஸுரதுத் தக்வீரையும்,ஸுரதுல் இன்பிதாரையும்,ஸுரதுல் இன்சிகாகையும்) ஓதி வருவாயாக.

Shazuli - 9

மனிதர்களுக்கு மத்தியில் செல்வந்தர் ஆக வேனண்டும் என்று விரும்புகின்ரவன் போதும்மென்ற மனப்பான்மையோடு வாழட்டும்.

Shazuli - 10

யாருடையகுரைகளை அல்லாஹ் மறைக்க வேண்டும் என்று நாடுபவன் பிறருடைய குறைகளை அவன் மறைக்கட்டும்.
யாராவது கடன் இல்லாமல் மரணிக்க நாடினால் அவன் தூங்குவதட்கு முன் (ஸுரதுல் வாகியாவை) ஓதி வரட்டும்.

Shazuli - 11

Powered By Indic IME