தரீக்காக்களின் தோற்றம்

இஸ்லாமிய வரலாற்றில் தரீக்காக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

குர்ஆன், ஸுன்னாவின் அடியாகத் தோன்றிய ஓர் ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சி கண்ட தஸவ்வுப் கலை வரலாற்றின் ஒரு வளர்ச்சிக் கட்டமே தரீக்காக்களாகும்.

 • தரீக்காக்கள் என்பவை ஆத்மீக ஞானிகளால் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஆத்மீக பண்பாட்டுப் பயிற்சிக்கான அனுஷ்டான முறைகளை உள்ளடக்கிய ஆத்மீக மரபுகளாகும்.
 • பிக்ஹு கலைத் துறையில் சில வரலாற்றுக் காரணங்களால் மத்ஹப்கள் தோற்றம் பெற்றது போல தஸவ்வுப் கலையில் தரீக்காக்கள் தோற்றம் பெற்றன.
 • ஆனால், இவ்விரு கலைகளினதும் மூலாதாரங்களாக குர்ஆனும், ஸுன்னாவும் அமைந்திருக்கின்றன.

ஷாதுலிய்யா தரீகா 

 • தாபகர் நூருத்தீன் அஹமத் இப்னு அப்துல்லாஹ் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலி (கி.பி. 1196 – 1258)
 • பிறப்பு : குமாரா (Ghumara), மொரோக்கோ
 • இடைக்காலத்தில் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் எனும் பெரியாரின் ஆலோசனைக்கு ஏற்ப டியூனீஷியாவுக்குச் சென்று அங்கு ஷாதலா எனும் இடத்தில் சில காலம் ஏகாந்த வாழ்விலும் தியானத்திலும் தனது நாட்களைக் கழித்தார். இதனாலேயே அவரது பெயரோடு ஷாதுலி எனும் பெயரும் ஒட்டிக் கொண்டது.
 • இவரது கருத்துக்கள் மக்களைக் கவர்ந்த போது இவரது செல்வாக்குப் பெருகியதை விரும்பாத அப்பிரதேச மார்க்க அறிஞர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர்.
 • அங்கிருந்து எகிப்து சென்ற அவருக்கு மக்கள் ஆதரவளித்தனர்.
 • பிரான்ஸிய மன்னன் சிலுவைப் போர் மூலம் எகிப்தைக் கைப்பற்றியிருந்த இக்காலப் பிரிவில் இவர் இஸ்ஸ{த்தீன் அப்துஸ்ஸலாம் போன்ற அறிஞர்களோடு சேர்ந்து சிலுவை வீரர்களக்கெதிராக அணிவகுத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
 • ஹிஜ்ரி 656இல் ஹஜ் இலிருந்து திரும்பும் வழியில் ஹ{மைஸரா எனுமிடத்தில் காலமானார்.
 • இவரது கருத்துக்களை அவரது மாணவர்களுல் ஒருவரான அதாவுல்லாஹ் என்பவர் அல் ஹகம் எனும் பெயரில் நூலுருப்படுத்தினார்.
 • அபுல் அப்பாஸ் அல் முர்ஸி என்ற பிரிதொரு மாணவர் மூலம் ஷாதுலிய்யா பரவியது.
 • இத்தரீகா எகிப்து, வட ஆபிரிக்கா, அரேபியா, ஸிரியா போன்ற பகுதிகளில் பரவியது.
 • இத்தரீகாவின் கிளைகளாக பல தரீக்காக்கள் தோன்றின.
 1. வபாஇய்யா
 2. அல் ஜஸ_லிய்யா
 3. அல் பாஸிய்யா
 4. அல் ஹஸாபிய்யா

சாதுலியா தரீகாவின் உசூல்கள் – 05

 1. பகிரங்கத்திலும் அந்தரங்கத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுதல்
 2. சொல்லிலும் செயலிலும் ஷரீயத்தை பின்பற்றல்
 3. எல்லா கருமங்களிலும் அல்லாஹ் வை முன்னிறுத்துதல்
 4. அல்லாஹ்வின் ரஹ்மத் கூடுதலாக அல்லது குறைவாக அருளப் படும் போது அல்லாஹ்வை பொருந்துதல்
 5. இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பல்

 

Powered By Indic IME