ஆக்ஸ்கேர்ஸ்

ஆக்ஸ்கேர்ஸ்

இங்குள்ள படத்தில் நீங்கள் பார்க்கும் பறவை ஆக்ஸ்கேர்ஸ் (oxpeckers) என்றழைக்கப்படும் சுத்தம் செய்யும் பறவை.

இந்தப் பறவைகள் காண்டாமிருகம், யானை, வரிக்குதிரைகள் போன்ற காட்டு விலங்குகளின் மீது அமர்ந்து, அவைகளின் உடல்களில் வாழும் ஒட்டுண்ணிகளை உணவாக உண்ணுகின்றன. இவ்வாறு காட்டு விலங்குகளை சுத்தம் செய்வதற்காக பறவைகள் மேற்கண்ட விலங்குகளின் மீது, குறிப்பாக விலங்குகளின் தலைகளின் மீது வந்து அமர்ந்தாலும், விலங்குகளுக்கு இது ஒரு தொல்லையாக தெரிவது இல்லை.
இந்த கூட்டு நடவடிக்கை, இரு படைப்பினங்களுக்கும் ஏராளமான பயன்கள் அளிக்கிறது.காட்டு விலங்குகளின் உடலில் உள்ள ஒட்டுண்ணி நீக்கப்படுவதோடு, மிருகங்களின் உடலில் இருந்து பெறப்படும் ரோமம் , பறவைகள் தங்களின் கூடுகளின் உட்பகுதியை பாதுகாக்க பயன்படுத்துகின்றன.
அல்லாஹ்வே அணைத்து உயிரினங்களையும் படைத்தான். அவன் படைத்த உயிரினங்களை ஒன்றிலிருந்து ஒன்றை பயன்பெறவும் செய்தான். உயிரினங்கள் யாவும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் உயிரினங்களையும், அவைகள் வாழும் சுற்றுச்சூழல்களையும் வடிவமைத்தான். இத்தகைய உயிரின்களை படைத்த எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

Powered By Indic IME